Sunday, March 11, 2007

போராளி கண்ணம்மாவிடம் ஒரு முறையிடல்..!



சுட்டு வீழ்த்தினரே கண்ணம்மா - எம்
சொந்த தமிழினத்தை - குண்டு
பொட்டுகளோ டெம் பிணங்கள்
வீதியி லிங்கு கண்டாய்
நட்ட நடு நிசியில் னீசர் செய்
நாசங்க ளென் சொல்வோம்
வெட்ட வெளியினிலே யெமை
வெட்டி யெறிந்தனரே-..கண்ணம்மா!



ஓடி ஒளிந்திடவே கண்ணம்மா- இங்
கெம் வூரினிலி டமுமிலை
கோடிகளில் அம்பாரம் (பதுங்கு) குழிகள்
வெட்டி வைத்தோம் (எமக்கு)
கூடி யொருங்கிணைந்து நாம் வாழ
நாதி யேதுமி லையே
கேளித்திருக்குது பாரங்கே ஈனத்தில்
சிங்களக் கும்ப லொன்று....கண்ணம்மா!


ஆத்திரம் கொண்டெழுந்தோம் - கண்ணம்மா
பார்த்திருத்தல் மடமை - தம்
மூத்திரம் பருக்கியே யெமக்கு அவர்
முட்டி யிடர் கொடுத்தார்.
பார்த்திருப்போமோடி இதோ பார்
படைகள் திரண்டு வந்தோம்
சாத்தியெடுப்போமடி யுன்னோடு
சிங்களத்தை சமரில் இன்றோடு...

**********

பாரதியின் சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா என்ற பாடல் ராகத்தில் பாடிப் பார்க்க விரும்புவர்கள் முயற்சி செய்யலாம். :)

4 comments:

Santhosh said...
This comment has been removed by the author.
Santhosh said...

உங்களின் குழும முகவரி அளிக்க முடியுமா? இல்லை யென்றால் sjsanthose@gmail.comக்கு ஒரு தனிமடல் அனுப்ப இயலுமா?

ஸ்வாதி said...

நன்றி சந்தோஷ்! பல நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லை. அதனால் இன்று தான் உங்கள் பின்னூட்டம் படிக்க நேர்ந்தது. காலதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

எனது குழுமம் பெயர்: தமிழ் பிரவாகம்.
முகவரி: http://groups.google.com/group/Piravakam

மின்னஞ்சல் முகவரி: Piravakam@googlegroups.com

இளங்குமரன் said...

வணங்குகிறேன். உங்கள் கவித் தன்மை கண்டு கலங்கிப் போனேன்.