Wednesday, August 15, 2007

ஈழத்தில் பாப்பாப் பாட்டு..!

ஒரு வேளை பாரதி மீண்டும் பிறந்திருந்தால்.. அதுவும் இம் முறை தமிழீழத்தில் பிறந்திருந்தால் அவருடைய பாப்பா பாட்டு இப்படித் தானிருந்திருக்கும்.............


ஓடி ஒளியாதே பாப்பா ! - நீ
ஓரமாயொ துங்கலாகது பாப்பா!
கோடியில் ஒருவளடி பாப்பா! -
நீதமிழீழக் குழந்தையடி பாப்பா!
**********
சிம்ம சொப்பனம் போலே - நீ
சிங்களத்தைச் சாடி வா பாப்பா!
பங்கர் பதுங்கு குளிகள் கண்டால் - நீ
வெந்து வெதும்பலாகாது பாப்பா!
**********
கொத்தித் திரியுமொரு கூட்டம் - அதை
எட்டித் துரத்திவிடு பாப்பா!
எத்தித் திருடுமந்ததக் கூட்டம் - அதற்கு
இரக்கம் காட்டலாகாது பாப்பா!
**********
பாலைப் பொழிந்து தரும் தாய் - என்
பசுந்தளிர் செல்வமடி பாப்பா!
வீரப் போரொ ன்று வந்தால் - நீ
விஞ்சி விளையாடிவிடு பாப்பா!
**********
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;
மாலை முழுதும் விளையாட்டு - என்ற
வழக்கம் நமக்கில்லையடி பாப்பா!
**********
காலையில் பள்ளி முடித்து - பின்னால்
மாலையில் திரும்பி வருவாயோ பாப்பா?
என்று வேளை முழுதும் வேதனையில் - இங்கு
வழி பார்திருப்பதென் விதியடி பாப்பா!
**********
சோதி மலருன்னைக் கண்ட பின்பே - மீத
வுயிர் ஈங்கெனக்குப் பாப்பா!
வீதி தோறும் விழும் செல்கள் பாப்பா! - கொஞ்சம்
விலத்தி நடந்து வா பாப்பா
!**********
தேகப் பயிற்சி வேணுமடி பாப்பா! - உன்னால்
சிங்களமே நடுங்க வேணுமடி பாப்பா!
வேகப் போர் முறைகளடி பாப்பா! - பல
வீர முழக்கங்கள் பழகடி பாப்பா!
**********
(தொடரும்)

4 comments:

இளங்குமரன் said...

புதுமையான சிந்தனை வாழ்த்துகள்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

அருமை !!!

தமிழ் அஞ்சல் said...

நல்லதொரு சிந்தனை!

ஈழத்துக்குழந்தைகளுக்காக பாடியதால் இன்று முதல்
நீங்கள் ஈழத்து பாரதி என அழைக்கப்படுவீர்கள்!

goma said...

ரீமிக்ஸ் போல பாரதியாரின் ரீ எண்ட்ரி
சூப்பர்